உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் புஷ்ப பல்லக்கில் உலா

மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் புஷ்ப பல்லக்கில் உலா

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள், புஷ்ப பல்லக்கில், வீதியுலா சென்றார். இக்கோவிலில், ஏப்., 23ல், சித்திரை பிரம்மோற்சவ விழா துவங்கி, மே, 2 வரை நடந்தது. நாள்தோறும், காலை, இரவு என, பல்வேறு உற்சவங்கள்; 27ல், கருடசேவை, 29ல், திருத்தேர் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, மே 3, 4, 5ல், விடையாற்றி உற்சவம் நடந்து, நேற்று முன்தினம் இரவு, சுவாமி புஷ்ப பல்லக்கில் வீதியுலா சென்றார். அன்று காலை, உற்சவர் உலகுய்யநின்ற நாயனார், தேவியருடன் எழுந்தருளி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு, புஷ்ப அலங்கார பல்லக்கில், சுவாமி, தேவியருடன் வீதியுலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !