உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமல காமாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா

கமல காமாட்சியம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அடுத்துள்ள தென் அர்த்தநாரிபாளையம் கமல காமாட்சியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 4ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜைகளும்; 5ம் தேதி முதல் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜைகளும் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. காலை, 9:15 முதல், 10:15 மணி வரை கோபுர விமானம் கலசங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பாலவிநாயகர், பாலமுருகன், கமலகாமாட்சியம்மன், கன்னிமார் சுவாமிகளுக்கும், பரிவார சன்னதிகளுக்கும் கும்பாபிஷேக நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு பின் புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அபிஷேகம், திருக்கல்யாணமும்; மாலையில், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !