உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை விழா

சக்தி மகாமாரியம்மன் கோவிலில் சித்திரை விழா

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அப்பா நகரில் உள்ள சக்தி மகாமாரியம்மன் கோவிலில், 35ம் ஆண்டு சித்திரைத் திருவிழா நடந்தது.கடந்த மாதம் 24ம் தேதி, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து, கோவிலில் பூச்சாட்டப்பட்டது. இம்மாதம் ஒன்றாம் தேதி, அக்னி கம்பம் நடப்பட்டது. 6ம் தேதி சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஊட்டி ரோடு வழியாக கோவிலுக்கு, பால் குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இன்று இரவு சுப்ரமணியர் கோவில் அருகே பவானி ஆற்றிலிருந்து பூச்சட்டி, பூங்கரகம், வானவேடிக்கை தாரை தப்பட்டை முழங்க அம்மன் சுவாமி அழைத்து வரப்பட உள்ளது. 9ம் தேதி பொங்கல் வைத்து மாவிளக்கு படைத்தலும், மாலையில் மதுரை வீரன் சுவாமி அழைத்தலும், 10ம் தேதி அம்மன் திருவீதி உலாவும், 11ம் தேதி மஞ்சள் நீராட்டும், அபிஷேக பூஜையும், 15ம் தேதி மறுபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !