திருவாடானை கோயில்களில் சித்திரை திருவிழா
ADDED :2720 days ago
திருவாடானை, சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருவாடானை பிடாரி அம்மன், செங்கமடை கருப்பசாமி, பண்ணவயல் முத்துமாரியம்மன், உவரிக்கோட்டை முத்துமாரியம்மன், நெட்டேந்தல் பிடாரிஅம்மன் கோயில்களில் திருவிழா நடந்தது. முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. பெண்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம்,கலைநிகழ்ச்சிகள் நடந்தன.