மழை வேண்டி சண்டி ேஹாமம்
ADDED :2743 days ago
காரைக்குடி: உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் கோவிலுார் மடாலய கல்வி நிறுவனங்கள் சார்பில் மகா சண்டி ேஹாமம் மடாலய வளாகத்தில் உள்ள ஐயுளி அம்மன் கோயிலில் கோவிலுார் சதாசிவாச்சாரியார்கள் நடத்தினர். ஒவ்வொரு கால பூஜை முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது. கலசங்களில் உள்ள நீர் ஐயுளி அம்மனுக்கு அபிேஷகம் செய்யப்பட்டு அலங்காரம், ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவிலுார் ஆதினம் மெய்யப்ப சுவாமி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். மடாலய அறநிலைய உறுப்பினர் ராமனாதன், ஆடிட்டர் முரளி, எஸ்.எம்.எஸ்., பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் பழனிவேலு, கல்வி நிறுவனங்களின் ஆலோசகர் குமரப்பன், முதல்வர்கள் செல்லப்பா, ரவீந்திரன், மணிமொழி முருகன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.