தேவி கருமாரியம்மன் கோவிலில் கரக உற்சவ விழா: பக்தர்க ள் பரவசம்
ADDED :2797 days ago
குன்னுார்: குன்னுார் வெலிங்டன் அருகே சின்னவண்டிசோலையில் அமைந்துள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், 113வது ஆண்டு கரக உற்சவ விழா கடந்த , 10ம்தேதி கொடியேற்றதுடன் துவங் கியது. தொட ர்ந்து, நாள்தோறும் அபிஷேக ஆராதனை, உச்சிகால பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன. திருவிழா நாளான நேற் று, பூகுண்டம் இறங்குதல், கங்கையையை அடைதல், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக, 15 நாட்களாக விரதம் இருந்து வரும் பெண்கள் , சிறுமியர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் பூசியபடி விழாவில் பங்கேற்றனர். இவர்களுக்கும், பக்தர்களுக்கும் நடந்த , சாட்டையடி நிகழ்ச்சி பக்தர்களை பரவசப்படுத்தியது. கரக உற்சவ விழாவில், திரளானபக்தர்கள் பங்கேற்றனர்.