உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்வு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பன்னிரு திருமுறை முற்றோதுதல் நிகழ்வு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஈரோடு: பன்னிரு திருமுறை முற்றோதுதலில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண மண்டபத்தில், 63 நாயன்மார்களில் முதன்மையான நால்வர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடிய, பன்னிரு திருமுறை முற்றோதுதல் நேற்று நடந்தது. மாதம் ஒரு முறை, இந்நிகழ்ச்சி நடக்கிறது. நேற்றைய நிகழ்வுக்கு, அரிகரதேசிக ஓதுவார் மூர்த்திகள் தலைமை வகித்தார். சிவனடியார்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓதுவார்கள், திருமுறை பாடல்களை பாடி, விளக்கமளித்தனர். ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !