உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடுமுடி வட மதுரை வீரன் சுவாமி கோவில் விழாவில் ரத்தம் குடித்த பூசாரி

கொடுமுடி வட மதுரை வீரன் சுவாமி கோவில் விழாவில் ரத்தம் குடித்த பூசாரி

கொடுமுடி: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே, புது அண்ணா மலை பாளையத்தில், வட மதுரை வீரன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு பொங்கல் விழா கடந்த, மே 8ல் தொடங்கியது. அதை தொடர்ந்து நாள்தோறும், சிறப்பு பூஜைகள் நடந்தன. கடந்த, மே 24ல் சிறப்பு அபிஷேகம், கன்னி மார் சுவாமிக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக, அன்று மாலை, கோவில் அருகே கிடாய் வெட்டி, கோவில் பூசாரி ரத்தம் குடிக்கும் நிகழ்வு நடந்தது. அருள் வந்து ஆடிய பூசாரி, தலை துண்டிக்க ப்பட்ட ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சி குடித்தார். அன்றிரவு மதுரை வீரன் சுவாமி, ராஜ அலங்காரத்தில் திருவீதி உலா சென்றார். நேற்று மே 25ல் காலை, அரண்மனை கிடாய் அழைத்தல், பொங்கல் திருவிழா, படைக்கலம் அழைக்கும் நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (மே26)ல்  மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டுடன், பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !