கிருஷ்ணராயபுரம் பாம்பாலம்மன் கோவிலில் பால்குடம் எடுக்கும் விழா
ADDED :2733 days ago
கிருஷ்ணராயபுரம்: பாம்பாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலம் சென்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள, லட்சுமணம்பட்டி கிராமத்தில், பாம்பாலம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், திருவிழா முன்னிட்டு, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நேற்று(மே 25)ல் காலை நடந்தது. மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு பாம்பாலம்மன் கோவில் சென்றனர். இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழா, வரும் ஜூன், 1 முதல், 3 வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் செய்துள்ளது.