நாமக்கல் நல்லிப்பாளையம், மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
ADDED :2731 days ago
நாமக்கல்: நல்லிப்பாளையம், மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் காட்டேரி வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமக்கல் அடுத்த, நல்லிப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 8ல், காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு, காப்புக்கட்டுதல் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 20ல் வடிசோறு பொங்கல் விழா, 23ல் மாவிளக்கு பூஜை, அக்னி குண்டம் பிரவேசம், அக்னி சட்டி எடுத்தல், 24ல் கிடா வெட்டுதல், நேற்று 25 ல், மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நடந்தது. அதில், 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் காட்டேரி வேடம் தரித்து தங்கள் வாயில் ஆட்டின் நாக்கை கடித்தபடி, பார்வையாளர்களை முறத்தால் அடித்து, கருப்பு விரட்டி ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை
விழா குழுவினர், பக்தர்கள், ஊர் மக்கள் செய்திருந்தனர்.