உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழா கோலாகலம்

ஆத்தூர் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழா கோலாகலம்

ஆத்தூர்: திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி விழாவில், 2,000 பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆத்தூர், தாயுமானவர் தெருவிலுள்ள, தர்மராஜர் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 6ல், தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று (மே 25)ல் காலை, மூன்று சிறு தேர்களில், சுவாமிகள் ஊர்வலம் நடந்தது.

மாலை, வசிஷ்ட நதிக்கரையில், அம்மன் சிலையை தலையில் சுமந்து வந்த துளுவ வேளாளர் மன்றத்தினர், அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதி விழாவை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து,
2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், கொட்டும் மழையில் நனைந்தபடி, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், துர்க்கை யம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு, அம்மன் தேரில் எழுந்தருளினார். இன்று (மே 26)ல் காலை, 10:30 மணிக்கு, தர்மர் பட்டாபி ஷேகம், மதியம், அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் விழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !