உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செட்டியாபத்து கோயிலில் வரும் 19ல் தைபூஜை திருவிழா!

செட்டியாபத்து கோயிலில் வரும் 19ல் தைபூஜை திருவிழா!

உடன்குடி : செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் தை பூஜை திருவிழா வரும் 19ம் தேதி மெக்கட்டி பூஜையுடன் துவங்கி நான்கு நாட்கள் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் தை பூஜை திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்தாண்டு வரும் 19ம் தேதி இரவு 10 மணிக்கு மேக்கட்டி பூஜையுடன் துவங்குகிறது. முன்னதாக பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 20ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழுநேர சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு சமய சொற்பொழிவும், இரவு 9 மணிக்கு திரைப்பட கச்சேரியும், வரும் 21ம் தேதி காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழுநேர சிறப்பு பூஜையும், வரும் 28ம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சரவணபவன் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !