பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாக திருவிழா
ADDED :2719 days ago
வாடிப்பட்டி, வாடிப்பட்டி தர்மராஜன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா மே 15 கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி பக்தர்கள் பாலதண்டாயுதபாணிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வாடிப்பட்டியிலிருந்து பாதயத்திரையாக வந்தனர். வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே மௌனகுருசாமி மடத்தில் அலகு குத்தி பக்தர்கள் பூக்குழி இறங்கினர். சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபி ஷேகம் நடந்தது. நாளை (மே 30) மின் அலங்கார பூப்பல்லக்கில் சுவாமி முக்கியவீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமத்தினர் செய்துள்ளனர்.