உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருப்பு

பழநியில் பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருப்பு

பழநி : வைகாசி விசாகத்தை முன்னிட்டு, பழநி முருகன்கோயிலில் பால்குடங்கள், காவடியுடன் குவிந்த பக்தர்கள் மூன்றுமணிநேரம் வரை காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர். கோடை விடுமுறை காரணமாக, பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று வைகாசிவிசாகம், சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை முதல் பால்குடங்கள், தீர்த்தக்காவடிகளுடன் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். ரோப்கார், வின்ச் ஸ்டஷேனில் 2 மணிநேரம் காத்திருந்தனர். பொதுதரிசன வழியில் 3 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். மதியம் 3:00மணிக்குமேல் கனமழை, சாரல்மழை என விட்டு, விட்டு பெய்ததால் ரோப்கார் சேவை பாதிக்கப்பட்டது. நகரில் அடிக்கடி மின்தடையும் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !