திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமிக்கு ரத்ன கிரீடம் உபயம்
ADDED :2719 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு பாடசாலை முன்னாள் மாணவர்கள் சார்பில் சுவாமிக்கு ரத்ன கிரீடங்கள், தங்க திருவாட்சி, தங்க சிம்மாசனம் உபயமாக வழங்கப்பட்டது. கோயில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வாைனக்கு 950 கிராம் தங்கத்தில் ரத்ன கிரீடங்கள், 200 கிராம் தங்க திருவாட்சி, 400 கிராம் தங்க சிம்மாசனம் வழங்கினர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன், சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை கமிஷனர் மாரிமுத்து பெற்றுக் கொண்டனர். பாடசாலை முதல்வர் ராஜா, கோயில் சிவாச்சார்யார்கள் கலந்து கொண்டனர். உபயமாக வழங்கப்பட்ட பொருட்கள் சுவாமிக்கு சாத்துப்படி செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.