உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சத்தி மாகாளியம்மன் கோவில் விழா: பக்தர்கள் பறவை காவடி ஊர்வலம்

சத்தி மாகாளியம்மன் கோவில் விழா: பக்தர்கள் பறவை காவடி ஊர்வலம்

சத்தியமங்கலம்: சத்தி அருகே, மாகாளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, பறவை காவடி அலகு குத்தி, பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சத்தியமங்கலம் அருகேயுள்ள, கொமராபாளையம் கிராமம், மாகாளியம்மன் கோவில் விழா கடந்த மாதம், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை, பொங்கல் வைபவம் நடந்தது. இதை தொடர்ந்து அம்மன் அழைப்பு, மாவிளக்கு பூஜை செய்யப்பட்டது. இதன் பின், பக்தர்கள் அலகு குத்தி பறவை காவடியை, ஊர்வலமாக எடுத்து சென்றனர். வடக்குபேட்டை தண்டு மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து சென்றனர். கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி இரவில் நடந்தது. மஞ்சள் நீராட்டு விழாவுடன், விழா இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !