திருடு போன கோவில் கலசம் தானாக கிடைத்த அதிசயம்
ADDED :2722 days ago
பெரம்பலுார்,: அரியலுார் அருகே, திருடு போன கோவில் கலசம், மீண்டும் கிடைத்தது. அரியலுார், உட்கோட்டை கிராமத்தில், ராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட, பழமையான, செல்லியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில், 100 ஆண்டுகளுக்கு முன், 3 அடி உயரம், 15 கிலோ செம்பினால் ஆன கலசம் வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, கோவிலின் கலசம் காணாமல் போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின்படி, ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில், கலசத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள், நேற்று அதிகாலை, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், கோவிலின் வாசலில், கலசத்தை மீண்டும் வைத்துச் சென்றனர். இதேபோன்ற சம்பவம், 15 ஆண்டுகளுக்கு முன்பும், இந்த கோவிலில் நடந்துள்ளது.