உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 20 அடி கோபுர காவடி தூக்கி வந்த கேரள பக்தர்

20 அடி கோபுர காவடி தூக்கி வந்த கேரள பக்தர்

பழநி : பழநி முருகன் கோவிலுக்கு கேரள பக்தர், 20அடி உயர கோபுரக்காவடி எடுத்து, நேர்த்திக் கடன் செலுத்தினார். கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த விநாயககுழு பக்தர்கள் நேற்று பழநி வந்தனர். அதில் ஒருவர், 20அடி உயரம், 80 கிலோ எடையுள்ள, மயில்இறகுகள், வண்ண காகிதப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோபுரக்காவடி எடுத்து, கிரிவீதியில் ஆடிவந்தார். பாதவிநாயகர் கோவிலில் தரிசனம் செய்து, மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து, முருகனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !