உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்வதி தேவி திட்டியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

பார்வதி தேவி திட்டியம்மனுக்கு பால்குடம் எடுத்த பக்தர்கள்

ஊத்துக்கோட்டை: பார்வதி தேவி திட்டி அம்மன் கோவிலில், மண்டல பூஜை முடிந்ததை ஒட்டி, பக்தர்கள் பால்குடம் எடுத்துச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ளது பார்வதி தேவி திட்டி அம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவில் சீரமைக்கப்பட்டு, கடந்த மாதம், கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, கோவிலில் அம்மனுக்கு மண்டல பூஜை நடந்தது. 48 நாட்கள் பூஜை முடிந்து, நேற்று காலை பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்துச் சென்றனர். அங்குள்ள ஐமுக்தீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்திக் கொண்டு, ஊர்வலமாக சென்றனர். பின், பக்தர்கள் எடுத்துச் சென்ற பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய்பபட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !