உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்

திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்கள்

வீரபாண்டி: திருப்பதிக்கு, 18ம் ஆண்டாக பாதயாத்திரை செல்ல, ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த, 16 பக்தர்கள், நேற்று முன்தினம், பெத்தாம்பட்டி, பெருமாள் கோவிலில், இருமுடி கட்டிக்கொண்டனர். நேற்று காலை, அங்கிருந்து யாத்திரையை தொடங்கினர். குருசாமி ராமானுஜதாசர் கூறுகையில், ஒரு நாளில், 35 முதல், 40 கி.மீ., தூரம் பாதயாத்திரை சென்று, 10 நாட்களில் திருமலைக்கு சென்று சுவாமியை தரிசிப்போம். மீண்டும் நடைபயணமாக, மலையில் இருந்து இறங்கி வந்து, ரயில் மூலம் சேலம் வரவுள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !