உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் வட பத்தரசயனர் கோயிலில் பெரியாழ்வார் ஆனிசுவாதி விழா ஜூன் 14ல் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பத்தரசயனர் கோயிலில் பெரியாழ்வார் ஆனிசுவாதி விழா ஜூன் 14ல் கொடியேற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வட பத்தரசயனார் கோயிலில், பெரியாழ்வார் ஆனி சுவாதி விழா, ஜூன் 14 அன்று கொடியேற்றதுடன் துவங்குகிறது.

அன்று காலை 10:30 மணிக்கு பெரியாழ்வார் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் தினமும் காலையில் மண்டபம் எழுந்தருளல், இரவு வீதி உலா நடக் கிறது. ஒன்பதாம் நாளான ஜூன் 22 அன்று காலை 6:00 மணிக்குமேல், பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் நடக்கிறது.

ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !