வத்திராயிருப்பு காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :2693 days ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேலப்பாளையம் காளியம்மன் கோயிலில் வருடாந்திர உற்ஸவம், பொங்கல் விழா விமரிசையாக நடந்தது. முதல்நாள் காலையில் காப்புக்கட்டு வைபவம், மாலையில் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
பக்தர்கள் ஊரணிக்கரையில் புதிய உற்ஸவ அம்மனை தயார் செய்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். பெண்கள் அம்மனுக்கு மஞ்சள் நீர் தெளித்தும், பக்தர்களுக்கு பாதபூஜைகள் செய்தும் வரவேற்றனர்.
2ம் நாளில் பெண்கள் முன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.மூலஸ்தான அம்மனுக்கும், உற்ஸவ அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் பக்தர்களின் மஞ்சள் நீராட்டு, அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இறுதியாக அம்மன் கரகம்
கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.