உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!

மெஹ்சானா : குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, ஒரு துறவி, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து வாழும் தகவல் வெளியாகியுள்ளது.


குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மெஹ்சானா மாவட்டம், சரோட் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் ஜனி, 88. சிவப்பு நிற உடையணியும் இவர், மாதாஜி என, அழைக்கப்படுகிறார். கடந்த, 70 ஆண்டுகளாக, உணவு, தண்ணீர் இன்றி, காற்றை மட்டும் சுவாசித்து உயிர் வாழும் இவரைப் பார்த்து, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் அதிசயிக்கின்றனர். கடந்த, 2010ல், நம் நாட்டின், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ., மற்றும் ராணுவ உடற்கூறியல் அமைப்பு இணைந்து, பிரஹலாத் ஜனியை கண்காணிக்க முடிவு செய்தது. அதன்படி, ஒரு தனி அறையில், பிரஹலாத்தை, 15 நாட்கள் தங்க வைத்து, தீவிரமாக கண்காணிக்கப்பட்டார். இதன்பின், அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், பட்டினியாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தான் வணக்கும் கடவுளின் அருளால், தியானத்தின் வாயிலாக, தனக்கு சக்தி கிடைப்பதாக, பிரஹலாத் கூறினர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபல அரசியல் தலைவர்கள், பிரஹலாத்தின் ஆசிரமத்துக்கு வந்து, ஆசி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !