உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை காளியம்மன் கோவிலில் தேரோட்டம்

தில்லை காளியம்மன் கோவிலில் தேரோட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா உற்சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது, இக்கோவிலில் கடந்த 4ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் உற்சவம் துவங்கியது. உற்சவத்தையொட்டி தினமும் தில்லை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வருகிறது. ஒன்பதாம் நாள் உற்சவமாக நேற்று தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி அம்மன் பிரகாரம் வலம் வந்து மதியம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !