உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி.,பெரியாழ்வார் சுவாதி விழா துவங்கியது

ஸ்ரீவி.,பெரியாழ்வார் சுவாதி விழா துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார்  வடபத்ரசயனர் கோயில்  பெரியாழ்வார்  சன்னதியில் ஆனி சுவாதி  விழா கொடியேற்றத்துடன்  துவங்கியது. நேற்று காலை 10:40 மணிக்கு பெரியாழ்வார் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்ய  பாலாஜி பட்டர் கொடி  ஏற்றினார். வேதபிரான் அனந்தராமன், அரையர் முகுந்தன், மணியம் ஸ்ரீராம், சுதர்சனன், ஸ்தானிகம் ரமேஷ், வெங்கடேஷ் மற்றும் பட்டர்கள் வேதமுழக்கங்கள் பாடினர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன், கோயில் அலுவலர்கள் உட்பட  திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 11   நாட்கள் நடக்கும் இவ் விழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், மாலை 6 :00மணிக்கு வீதி உலா நடக்கிறது. ஒன்பதாம்  நாளான ஜூன் 22   காலை 6 :00 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !