ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும்!
ADDED :2693 days ago
ஈத்துவக்கும் இன்பப்பெருநாளான ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாட உள்ளோம்.நோன்பிருந்து அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்ததன் மூலம், அவனிடம் இருந்து கருணையைப் பரிசாகப் பெற்றுக் கொண்டோம். சுவனத்தின் (சொர்க்கம்) பாதையை வலுப்படுத்தியுள்ளோம். பசியின் கொடுமையை உணர்ந்து, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய தத்துவத்தை உணர்ந்திருக்கிறோம். புனித ஷவ்வால் மாதம் பிறந்ததும் நோன்பை முடித்து, உண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருக்க மார்க்கம் அனுமதித்திருக்கிறது. அதற்காக, வரம்பு மீறி செயல்பட்டு விடக்கூடாது. கேளிக்கை நிகழ்ச்சிகள் இஸ்லாமுக்கு ஏற்புடையதல்ல. ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். வஸ்ஸலாம்!
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:45 மணி.