சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :3032 days ago
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர், விபூதி, தயிர், பன்னீர், திருமஞ்சணம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.