சக்தி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்
ADDED :2689 days ago
வடமதுரை, மோர்பட்டி ஊராட்சி கொல்லபட்டி புதுாரில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலை கிராம மக்கள் கடந்தாண்டு திருப்பணி செய்து முன்மண்டபத்துடன் நிர்மாணித்து கும்பாபிஷேகம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தற்போது வருடாபிஷேகம் நடந்தது. கணபதி, தன்வந்திரியாக பூஜைகளை துாங்கணம்பட்டி ஸ்ரீரங்கநாத பெருமாள் கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் தலைமையில் குழுவினர் நடத்தினர்.