சிறுவாலை கோவிலில் சோமவார உச்சிகால பூஜை
                              ADDED :2691 days ago 
                            
                          
                          கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜைகள் நடைபெற்றன. கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், திங்கட்கிழமை தோறும், சோமவார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதன்படி நேற்று காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் பூஜையும், தொடர்ந்து உச்சிகால பூஜையும் நடந்தது. வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.