ராமானந்த சுவாமிகள் மடாலயத்தில் குருபூஜை
ADDED :2691 days ago
கொடுமுடி: சிவகிரி ராமானந்த சுவாமிகள் மடாலயத்தில், குருபூஜை விழா நடந்தது. சிவகிரி, ஜீவா தெருவில், ராமானந்த சுவாமிகள் மடாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், ஆனி மாதம் மக நட்சத்திர நாளில், ராமானந்தர் குருபூஜை விழா நடக்கும். மக நட்சத்திர தினமான நேற்று, ராமானந்த சுவாமிக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதையடுத்து, ராமானந்தர் பக்தி பாடல்கள் பாடப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது.