உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரிப்பையூரில் கந்தூரி விழா

நரிப்பையூரில் கந்தூரி விழா

சாயல்குடி, நரிப்பையூரில் ஐந்து ஏக்கர் கடற்கரை அருகே காதர் சாகிபு ஒலியுல்லாஹ் தர்காவில், 11ம் ஆண்டு மதநல்லிணக்க கந்துாரி விழாவை முன்னிட்டு மாலை4:00 மணிக்கு மக்பராவில் பச்சை போர்வை, மல்லிகைசரம் போர்த்தப்பட்டு, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்கான மவுலீது ஓதப்பட்டது. இரவு 7:00 மணிக்கு கொடியேற்றப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகை செய்யப்பட்டது. விழாக்குழுத்தலைவர் காதர் அலி, துணைத்தலைவர் காதர் சம்சு,ஒப்பிலான் ஜமாத் தலைவர் நாகூர் கனி, செயலாளர் ஹாஜா மைதீன்,பொருளாளர் ஜாஜஹான், நிர்வாகிகள் மைதீன் முசாபர், சீனி சிக்கந்தர், அயூப்கான் உட்பட பலர் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !