உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: மடுகரை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை குருநகரில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமே லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சுதர்சன ஆழ்வாருக்கு சித்திரை நட்சத்திர விழாவையொட்டி, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி, உற்சவ மூர்த்திக்கு பால், சந்தனம், மஞ்சள்பொடி, அபிஷேகப்பொடி, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், எலுமிச்சைபழம் ஆகியவை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !