பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் 2.52 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை
ADDED :2698 days ago
அந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், 2.52 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், எட்டு உண்டியல்கள், ஈரோடு ஆய்வாளர் பாலசுந்தரி, கோவில் செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில், நேற்று திறந்து எண்ணப்பட்டன. அதில், 2.52 லட்சம் ரூபாய், 28 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி இருந்தது. இவை அனைத்தும், கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கடைசியாக, 52 நாட்களுக்கு முன் இக்கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன.