உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் திருவிழாக்கள் புத்தகமாகிறது

திருப்பரங்குன்றம் கோயிலில் திருவிழாக்கள் புத்தகமாகிறது

திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் திருவிழாக்கள் குறித்து புத்தகங்களாக வெளியில் வரவுள்ளன. இக்கோயிலில் ஆருத்ரா தரிசனம், எண்ணெய் காப்பு, தெப்பம், பங்குனித் திருவிழா, விசாகம், ஊஞ்சல் உற்சஸம், நவராத்திரி, மலை மீது குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா என ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, கார்த்திகை, பவுர்ணமி கிரிவலம், இரு முறை சுவாமி மதுரை எழுந்தருளல், வருடாபிஷேகம், ஆடி 1008 விளக்கு பூஜை, மாதந்தோறும் 108 விளக்கு பூஜைகள் நடக்கின்றன. இத்திருவிழாக்களை பக்தர்கள் அறிய ஏதுவாக உபயதாரர் மூலம் கோயில் நிர்வாகம் புத்தகமாக தயாரித்து வருகின்றனர். விரைவில் இவை வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !