மதுரை, கள்ளந்திரியில் ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகப் பெருவிழா
மதுரை: அழகர்கோயில் சாலையில் உள்ள கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்திற்குப் புராதன பாத்தியப்பட்ட அருள்மிகு ஐயப்பன் திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா 01.07.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.35 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் இனிதே நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல்:
(30.06.2018) சனிக்கிழமை
காலை 8.30 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் - விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்ஜகவ்யம், ஆசார்ய விசேஷ ஸந்தி, நான்காம் கால யாக வேள்வி, பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் மாலை 5.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் - விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்ஜகவ்யம், ஆசார்ய விசேஷ ஸந்தி, ஐந்தாம் கால யாக வேள்வி, ரத்னந்யாசம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பூர்ணாகுதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல்
(01.07.2018) ஞாயிற்றுக்கிழமை -
காலை 5.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் - அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, பஞ்ஜகவ்யம், ஆறாம் கால யாக வேள்வி, நாடி ஸந்தானம், ஸ்பர்ஸாகுதி, திரவ்யாகுதி, பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, விமானங்கள் மஹா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம் உடன் மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம், எஜமானோருக்கு மரியாதை செய்தல், ஆசார்ய மரியாதை செய்தல்
மஹா கும்பாபிஷேகம் ஸர்வ ஸாதகம்
திரு. சி. ஷண்முகசுந்தர பட்டர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
ஏற்பாடு: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், தமிழ் மாநில அமைப்பு.