உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் விமரிசை

சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில் தேரோட்டம் விமரிசை

நாயக்கன்பேட்டை: வள்ளி, தெய்வானை சமேத, சிவ சுப்ரமணிய சுவாமி கோவிலில், தேரோட்டம் நேற்று, கோலாகலமாக நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, நாயக்கன்பேட்டை கிராமத்தில், வள்ளி, தெய்வானை சமேத சிவ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை, கோலாகல கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 11:30 மணிக்கு, புதிதாக செய்யப்பட்ட தேரில், வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், புதிய தேரை வடம் பிடித்து, இழுத்து சென்றனர். பிரதான வீதிகளில் தேர் சுற்றி வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏராளமானோர் பங்கேற்று, ஆறுமுகப்பெருமானை வணங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !