கோயில்களில் பெருமாளை வணங்கும் முன் தாயாரை வணங்க வேண்டுமா?
ADDED :2953 days ago
சரணாகதி அடைய விரும்புபவர்கள் உடனடி பலன் பெறும் சூட்சுமத்தை ராமாயணத்தின் அயோத்தியா காண்டம் காட்டுகிறது. ராமன் காட்டுக்கு கிளம்பியதும் உடன் வருவதாக லட்சுமணன் தெரிவித்தான். ஆனால் ராமன் சம்மதிக்கவில்லை. லட்சுமியின் அம்சமான சீதையும் காட்டுக்கு வருவேன் என்று அடம் பிடித்தாள். இது தான் சமயம் என்று கருதி லட்சுமணனும்,“அண்ணா! நானும் காட்டுக்கு உங்களுடன் வருகிறேன்” என்று மீண்டும் சொல்ல ராமன் சம்மதித்தான். தஞ்சம் என வந்தவர்களை தாயாரின் மனம் மறுப்பதில்லை. இதனடிப்படையில், கோயில்களில் பெருமாளை வணங்கும் முன் தாயாரை வணங்க வேண்டும் என்ற நியதி உண்டானது. நாராயணர், நரசிம்மர், ஹயக்ரீவர் ஆகிய திருநாமங்களோடு லட்சுமி தாயாரையும் இணைத்துச் சொல்வர்.