மதுரை வீரன் கோவிலில் மண்டல அபிஷேகம் நிறைவு
ADDED :2652 days ago
கரூர்: க.பரமத்தி அடுத்த, பசுபதிபாளையம் மதுரை வீரன் கோவில் மண்டல அபிஷேகம் நிறைவு விழா, நேற்று நடந்தது. இதையொட்டி, ராமேஸ்வரம் சென்று எடுத்து வந்த புனித நீரை, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து விநாயகர், ஏழு கன்னிமார்கள், கருப்பண்ண சுவாமி, பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சமேத மதுரைவீரன் சுவாமிகளுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது. அடுத்து, விநாயகர் வழிபாட்டுடன், 108 சங்கு பூஜை ஹோமம், மகாலட்சுமி, சுதர்சனம், நவக்கிரக ஹோமம் மற்றும், 96 வகையான திரவிய பொருட்களால் ஹோமம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.