செம்பொற்ஜோதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :2960 days ago
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவில், ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை, சுவாமி திருவீதி உலா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பழைய கரூர் - திருச்சி சாலையில், செம்பொற் ஜோதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், புனரமைப்பு பணிகள் முடிந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் ஆறாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடந்தது. இதில், சிவன், அம்மன் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்த பின், இரவு முக்கிய வீதிகள் வழியாக, சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.