மாகாளியம்மன் கோவிலில் வருடாபிஷேக விழா
ADDED :2649 days ago
சென்னிமலை: சென்னிமலை அடுத்து, பழையபாளையத்தில் உள்ள, மாகாளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு கும்பாபிஷேகம் செய்த ஏழாம்ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. கலசஸ்தாபனம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமானோர், சுவாமி தரிசனம் செய்தனர்.