அமர்நாத் குகைக்கோயிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி
ஸ்ரீநகர்: ஜம்மு- -காஷ்மீரில் மோசமான வானிலையால் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது.தெற்கு காஷ்மீரில் இமய மலைத் தொடரில் 3,880 அடி உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசிப்பதற்காகஏராளான பக்தர்கள் யாத்திரை செல்வர். அதன்படி, இந்தாண்டும் கடந்த 28-ம் தேதி யாத்திரை தொடங்கியது.ஆனால், அவ்வப்போது பெய்துவரும் கனமழையால் யாத்திரை தடைப்பட்டு வருகிறது.
நிலச்சரிவு அபாயம் காரணமாக பஹல்காம், பால்டால் ஆகிய இடங்களில் உள்ள மலையடிவார முகாம்களில் இருந்து பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வதைக் கடந்த மூன்று நாட்களாக நிறுத்தப்பட்டிருந்தது.கடந்த 3ம் தேதி பால்தால் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்நிலையில் பஹல்காம், பால்டால் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களைச் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது வானிலை சீரானதைத் தொடர்ந்து குகைக் கோயிலுக்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.