மாமியார் பெயர் சொல்லாத மருமகள்
ADDED :2660 days ago
திருப்பாவையின் 25வது பாசுரத்தில், கண்ணனின் பிறப்பைச் சொல்லும் போது ‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’ என்று குறிப்பிடுகிறாள் ஆண்டாள். கண்ணனுக்கு இரண்டு தாயார்கள். பெற்றவள் தேவகி. வளர்த்தவள் யசோதை. இருவரின் பெயரையும் அவள் குறிப்பிடவில்லை. தன் வருங்கால மாமியார்களின் பெயர்களைச் சொல்லக்கூடாது என்ற பயம் கலந்த மரியாதையே இதற்கு காரணம் என்பார்கள் பெரியவர்கள்.