காலாடிபட்டி காளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா
ADDED :2747 days ago
கன்னிவாடி, குட்டத்துப்பட்டி அருகே காலாடிபட்டியில் காளியம்மன், பகவதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், சுவாமி அழைப்பு, ஊர்வலம், சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான, பூக்குழி இறங்குதல் நேற்று நடந்தது. கோயில் அருகே பூக்குழி குண்டம் வளர்க்கப்பட்டது. முன்னதாக காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள், அதில் இறங்கினர். சில பக்தர்கள், குழந்தைகளைச் சுமந்தபடி இறங்கினர்.