உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கவுமாரியம்மன் வீதியுலா

பெரியகுளம் கவுமாரியம்மன் வீதியுலா

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில்  ஆனித் திருவிழா 8 ம்நாள் மண்டகப்படியில் அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா சென்றார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பெரியகுளம் தென்கரை குருசாமி, பத்ரகாளியம்மாள் நினைவாக, கவுமாரியம்மன் திருவிழா 8ம் நாள் மண்டகப்படி நடந்தது. கவுமாரியம்மன் கோயிலிலிருந்து, வணிக வைசியர் சங்கத்திற்கு  எழுந்தருளினார். அம்மனுக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. குதிரை வாகனத்தில், மின்ஒளி அலங்காரத்தில் அம்மன், முக்கிய தெருக்களில் கலைக்குழு மற்றும் பேண்ட் வாத்தியம் முழங்க  வீதி உலா சென்றார். ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் முத்து, பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் மற்றும் தேனி ரத்தினம் பஸ் சர்வீஸ் உரிமையாளர் சுந்தரவடிவேல், ரத்தினம் ஆர்த்தோ சென்டர் டாக்டர் ராஜமணிகண்டன்  செய்திருந்தனர். வணிகவைசியர் சங்க நிர்வாகிகள், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

*நேற்று 9ம் நாள் திருவிழாவில் அதிகாலை முதலே  ஏராளமான பக்தர்கள் தண்ணீர் எடுத்து கோயிலில்  கம்பம் மற்றும் கொடிமரத்திற்கு ஊற்றினர். மாவிளக்கு, ஆயிரம்கண்பானை எடுத்து  நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய திருவிழாவான இன்று 10ம் நாளில்  ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி  எடுத்து அம்மனை வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !