அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம்
ADDED :2643 days ago
மதுரை: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடித்திருவிழா இன்று(ஜூலை 19) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சுந்தரராஜப்பெருமாள் தங்கப் பல்லக்கில் காலை, மாலை அன்ன, சிம்ம, அனுமார், கருட மற்றும் சேஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஜூலை 23 இரவு சிவகங்கை சமஸ்தான மறவர் மண்டபத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளி, 24ல் மோகினி அவதாரத்தில் அருள்பாலிக்கிறார். 25ம் தேதி காலை சூர்னோத்ஸவத்திற்கு பின் இரவு புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளுவர். 27ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நிறைவாக ஆக., 11ல் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம், துணை கமிஷனர் மாரிமுத்து செய்து வருகிறார்கள்.