உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபாலர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

வேணுகோபாலர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்: வேணுகோபால சுவாமி பஜனை கோவில் கும்பாபிஷேகம், விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம், பாக்ராபேட்டையில், மஞ்சள் நதிநீர் கால்வாயையொட்டி, பழமையான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பிக்க, இப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகள் நடந்து முடிந்தன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை, 8:30 மணிக்கு கும்பாபிஷேகமும், தொடர்ந்து, மகா அபிஷேகமும், சுவாமி திருவீதியுலாவும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !