உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குங்குமத்தின் மங்கலம்

குங்குமத்தின் மங்கலம்

நெற்றி புருவ நடுவில், பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி உள்ளது. இதனை ஆக்ஞா சக்ர ஸ்தானம் என்பர். இதுவே மூன்றாவது கண், ஞானக்கண் என்று சொல்லப்படுகிறது. சிவபெருமானுக்கு நெற்றிக்கண் அமைந்திருப்பதும் இந்த ஆக்ஞா சக்கரத்தில்தான்.   இதன் சிறப்பை உணர்வதற்காகவே புருவ மத்தியில் குங்குமம் இடுகிறோம்.  உடலில் உள்ள மின்காந்த ஆற்றல் இந்த ஆக்ஞா சக்கரத்தில் தான் அதிகம் வெளிப்படுகிறது. இந்த இடத்தில் உஷ்ணம் ஏற்படும் போதெல்லாம் தலைவலி, மனக்குழப்பம், எரிச்சல் உண்டாகும். இதை தவிர்க்கவே குங்குமம், சந்தனம் வைத்து ஆக்ஞா சக்கரத்தை குளிர்ச்சிப்படுத்துகிறோம் இதனால், மனோசக்தி வீணாவதில்லை.  முகம் பார்க்க பொலிவுடன் திகழும். உச்சந்தலையில் வைக்காமல் புருவ நடுவில் குங்குமம் வைப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !