உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ சிறப்பு பூஜை

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ சிறப்பு பூஜை

தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரிஷிவந்தியத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமையான முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவம், கடந்த 16 ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. 


தினமும் மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிேக்ஷகமும், பரிவார மூர்த்திகளுக்கு ஆராதனைகளும் நடக்கிறது. பூஜைகளை நாகராஜ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர். இரவு சர்வ அலங்காரத்தில்  பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா நடந்து வருகிறது. இன்று (22ம் தேதி) இரவு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை சம்ஹார உற்சவமும், அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் தேர் திருவிழாவும் நடக்கிறது. சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய தாலுகாவில்,  இக்கோவில் தேர் மிகப்பெரியது என்பது சிறப்பம்சமாகும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில் செயல்அலுவலர் ராமலிங்கம் மேற்பார்வையில், பெரியபால மூப்பர் வகையாறா மற்றும் பொதுமக்கள்  செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !