உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வராகி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

வராகி அம்மன் கோயிலில் பால்குட ஊர்வலம்

கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆடிமாத சிறப்பு பால்குட ஊர்வலம் நடந்தது. மூலவர் வராகி அம்மன், மங்கைமா காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு, அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில்  காணப்பட்டனர். பெண்கள் பச்சை மஞ்சள் அரைத்து, அம்மனுக்கு சாத்தி நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். மாலையில் உலக நன்மைக்காக உதிரிப்பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, பூச்சொரிதல் விழா நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !