உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முன்னோர் வழிபாடு : கொடுமுடியில் ஏற்பாடு

முன்னோர் வழிபாடு : கொடுமுடியில் ஏற்பாடு

சேலம்: ஆடி அமாவாசை தினமான ஆக.,11ல் காலைக்கதிர் ஆன்மிகக்கதிர் வாரஇதழ் சார்பில் கொடுமுடி ஏமகண்டனுார் காவிரியாற்றங்கரையில் பித்ரு தர்ப்பணத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், கணபதி பூஜை, அமாவாசை சங்கல்பம், வருண கலச  பூஜை, நவக்கிரக பூஜை, பித்ரு பூஜை, பித்ரு பிண்ட பூஜை, தர்ப்பணம், தீபாராதனை, சூரிய நமஸ்காரம், பித்ரு பிரசாத ஆசீர்வாதம், கோ பூஜை(பித்ருக்களுக்கான சமஷ்டி ஹோமம்) நடக்கிறது. காலை 6:30-7:00; 7:15-7:45; 8:00-8:30; 8:45-9:15; 9:30-10:00 மணி வரை என, ஐந்து  பிரிவாக சமஷ்டி ஹோமம் நடக்கிறது. பங்கேற்க கட்டணம் உண்டு. 95976 66400ல் ஜூலை 31க்குள் முன் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !